ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 21, 2019
   
Text Size
பதாகை

மக்கள் குரல்

இது மக்களுக்கான பக்கம். இங்கு ஒலிப்பது மக்களின் குரலே! பொதுமக்கள் உங்கள் குறைகளையும், ஆதங்கங்களையும் இங்கே பகிர்ந்து கொள்ளலாம்.

இப்பகுதியில் வெளிவரும் ஆக்கங்கள் தனிப்பட்ட நபரையோ அல்லது ஒரு குழுவையோ நேரடியாக தாக்குவதாக அமைந்தால் அது பற்றி உரியவர்கள் உடனடியாக கிண்ணியா நெட் நிருவாகத்திற்கு அறியத்தருமிடத்து அவ்வாக்கம் நீக்கப்படும்.


சுய முகவரி இல்லாமல் இயங்கும் அரச திணைக்களம்: தேடும் பணியில் கிண்ணியா மக்கள்

vetenary1

கிழக்கு மாகாண அமைச்சின் கீழ் இயங்கும் ஒரு திணைக்களம் கிண்ணியாவில் கொழும்பு பிரதான வீதி குட்டித் தீவில் அமையப் பெற்று இருக்கிறது. இது கடந்த பல மாத காலமாக முன் பதாகை உடைந்து தேடுவாரற்று காணப்படுகின்றது.

 

கிழக்கு புற்றுநோய் பராமரிப்பு நிலையம், எமது உறவுகளுக்காக உதவிடுவோம்

 

cancer

இலங்கையில் புற்றுநோய் அதிகரித்துக்கொண்டு போவது மிகவும் கவலைக்குறிய அதிர்ச்சியான செய்தியாகும்.இருதய நோயை விடவும் புற்றுநோய்தான் எதிர்காலத்தில் அதிகரித்துக் காணப்படும் என்று சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன ஓரிரு நாட்களுக்கு முன் கூறியமையும் இந்த ஆபத்தான நிலையை அடிப்படையாக வைத்துத்தான்.

 

கிண்ணியா மாஹாத் அவர்களின் சிறுநீரக சத்திரசிகிச்சைக்கு உதவுங்கள்..

 

imahath1

கிண்ணியா ஆலிம் விதியை சேர்ந்த அப்துல் கரீம் மாஹாத்து என்பவர் 7 பிள்ளைகளின் தகப்பனாவார். இவரது இரண்டு சிறு நீரகங்களும் பாதிக்கப்பட்டு உயிருக்குப்போராடிகொண்டிருக்கிறார். மேலும் இவரது சத்திரசிகிச்சை செய்வதற்கான சிறுநீரகம் ஒருவர் முலம் கிடைக்கப்பெற சம்மதித்து வைத்திய பரிசோதணை நிறைவடைந்துள்ளது.

 

கிண்ணியா சூரங்கல் மக்களின் சுகாதாரம் பாதிப்பு; அதிகாரிகள் கவனயீனம்!!

mi2

கிண்ணியா கால்நடை வளர்ப்பு கூட்டுறவு சங்கத்தின் பால் பதனிடும் நிலையத்தின் பழுதடைந்த பாலை சூரங்கல் ஆயுர்வேத வைத்தியசாலை வீதிக்கு அருகாமையில் வீசுவதால் பொதுமக்கள் பாரிய சுகாதார சீர்கேட்டினை எதிர்நோக்குவதாக கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரிக்கு முறைப்பாடு செய்துள்ளனர்.

 

யுத்தத்தின் போது பாதிக்கப்பட்ட தோப்பூர் நெற் களஞ்சியசாலை புனரமைத்து தருமாறு கோரிக்கை.!

tp

கடந்த 30 வருட கால யுத்த சூழ்நிலையின் போது பாதிக்கப்பட்ட தோப்பூர் நெற் களஞ்சியசாலை இன்னும் புனரமைக்கப்படாது புற்புதர்கள் வளர்ந்து காடாக காட்சியளிப்பதையும் தற்போதய அதன் தோற்றத்தையும் இங்கு படத்தில் காண்பதோடு கிழக்கு மாகாண முதலமைச்சரின் நேரடி கவணத்திற்கு தோப்பூh பிரதேச விவசாய மக்களின் கோரிக்கையாக இதனை கொண்டு வருகின்றோம்.

 

கிண்­ணியா குறிஞ்­சாக்­கேணி பாலத்தின் புன­ர­மைப்பு பணிகள் மந்­த­க­தி­களில் மக்கள் விசனம்

888888

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

கிண்­ணியா குறிஞ்­சாக்­கேணிப் பாலத்தின் புன­ர­மைப்புப் பணிகள் மந்த கதியில் இடம்­பெ­று­வ­தனால் தாம் பல்­வேறு சிர­மங்­களை எதிர்­நோக்கி வரு­வ­தாக மக்கள் தெரி­விக்­கின்­றனர்.அண்­மையில் ஏற்­பட்ட வெள்­ளப்­பெ­ருக்குக் கார­ண­மாக முற்­றாகச் சேத­ம­டைந்த பாலத்தை புன­ர­மைப்புச் செய்­வ­தாக பல அர­சி­யல்­வா­திகள் முன் வந்த போதிலும் அதன் புன­ர­மைப்புப் பணிகள் சீராக இடம்­பெ­ற­வில்லை என மக்கள் குற்றம் சாட்­டு­கின்­றனர்.

 

கிண்ணியா மணியரசன் குளம் புனரமைப்பு செய்யப்படாமை குறித்து மக்கள் விசனம்

DSC03362

கிண்ணியா வானாறு மணியரச  கிராம மக்களுக்கு சகல வேலைக்கும் பயன் தரக்கூடிய மணியரசன்  குளம் இதுவரை புனரமைப்பு செய்யப்படாமையால் அப்பகுதி மக்கள் தொழில் முயற்சிகளை முறையாக மேற்கொள்ள முடியாதிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

மர்ஹூம் ஏ.எல்.அப்துல் மஜீத் நிர்மாணித்த மாஞ்சோலை பாலம் இடிந்து விழும் நிலையில்!

DSC03347

கிண்ணியா மாஞ்சோலைப் பாலம் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளதால் கனரக வாகனங்க செல்ல முடியாதுள்ளதுடன் சாதாரண வாகனங்களும் பயணிகளும் அச்சத்துடன் பயணிக்கும் நிலை காணப்படுகின்றது.

 

தம்பிலகாமம் 06 வாய்கால் பகுதியில் முதலைகள் நடமாட்டம்! மக்கள் அச்சம்! அகற்ற நடவடிக்கை எடுப்பார்களா?

DSC03334

தம்பிலகாமம் 06  ஆம் வாய்கால் பகுதியில்  அதிகமான முதலைகள் நடமாடுவதை அவதானிக்க முடிகின்றது என மக்கள் கூறுகின்றனர்.

 

கிண்ணியா கச்சக்கொடு தீவு வாராந்த சந்தையின் அவல நிலை

DSCF2032

 கிண்ணியா பிரதேச சபைக்குற்பட்ட கச்சக்கொடுத்  தீவுவில்  அமைந்துள்ள வாராந்த சந்தை மழை நாட்களில் சகதி நிறைந்து நீர் நிரம்பி காணப்படுவதால் சந்தைக்கு வருகை தரும் பொது மக்கள் பெரிதும் கஷ்டங்களுக்கு ஆளாக நேரிடுவதாகத் தெரிவிக்கின்றனர்.

 

கட்டையாறுப் பாலம் எந்நேரத்திலும் உடைந்து விழும் நிலை: மக்கள் அச்சம் !

DSCF1834

சின்னக் கிண்ணியாவையும் பெரிய கிண்ணியாவையும் இணைக்கும் கட்டையாறுப் பாலம் எந்நேரத்திலும்  இடிந்து விழும் நிலையில் இருப்பதால் அவற்றை உடனடியாக புனர்நிர்மாணம் செய்து தருமாறு பொது மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

   

வீதியை புனரமைக்க வேண்டுகோள்

20141001(005)

கிண்ணியா பிரதேச சபைக்குட்பட்ட நடுத்தீவு பிரதான வீதியிலிருந்து காக்காமுனை ஊடாக கச்சக்கொடுத்தீவு செல்லும் பிரதான வீதியானது குன்றும் குளியுமாக காணப்படுகின்றது இவ்வீதியினூடாக பிரயாணம் செய்கின்ற பொதுமக்கள் , பாடசாலை மாணவர்கள் , அரச உத்தியோத்தர்கள் மற்றும் நோயாளிகள் பல்வேறு சிறமங்களை எதிர் நோக்குகின்றார்கள்.

   

மக்கள் குரல்: சம்மாந்துறையில் தொடரும் யானைகளின் அட்டகாசம்!

 sam

சம்மாந்துறை ஊரானது வயல் நிலங்களால் சூழப்பட்டு அமையபெற்றிருக்கும் ஓர் ஊர் என்றால் மிகையாகாது என்றே கூற வேண்டும்.சம்மாந்துறையில் வயல் வேலைகள் ஆரம்பித்தவுடன் வேளாண்மைகளை யானைகளிடமிருந்து பாதுகாத்துக்கொள்ளும் நோக்கில் யானைகளைத் தடுப்பதற்காக வேண்டி வயல் அறுவடைகள் முடியும் வரை சிலர் பொறுப்பாக நியமிக்கப்படும் தற்காலிக யானைத் தடுப்பு வழி முறை தான் பல வருடங்களாக சம்மாந்துறையில் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

   

கிண்ணியா அல்-முஜாகிதா வித்தியாலயத்தின் அவல நிலை..!

al-mujahida04

அண்மையில் வீசிய கடும் காற்றின் காரணமாக கிண்ணியா கல்வி வலயத்திற்குட்பட்ட முனைச்சேனை அல்-முஜாகிதா வித்தியாலயத்தில் அமைந்துள்ள தற்காலிக தகரக் கொட்டில்கள் சேதமடைந்து வகுப்பறைக்குள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அத்துடன் இன்னுமொறு தகரக் கொட்டிலின் தகரங்கள் வீசி எறியப்பட்டுள்ளன. இக் கொட்டில்களில் தரம் 6, 7, 10, 11 ஆகியவகுப்புக்களின் கற்றல் செயற்பாடுகள் நடைபெறுகின்றன. அத்துடன் 50 வருடங்கள் பழைமைவாய்ந்த கட்டடம் ஒன்று என்னேரமும் ஆபத்தை ஏற்படுத்தும் நிலையில் காணப்படுகின்றன. இக்கட்டத்திலும் வகுப்புக்கள் நடாத்தப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

   

பக்கம் 1 - மொத்தம் 3 இல்

பதாகை
பதாகை

மக்கள் குரல்

பதாகை

வாசகர்கள்..

இந்த மாதம்...34025
மொத்த பார்வைகள்...2312584

Currently are 511 guests online


Kinniya.NET