வெள்ளிக்கிழமை, மார்ச் 22, 2019
   
Text Size

2018 இல் புதிதாக 28,000 புற்றுநோயாளர்கள்

image fff574b935

2018 ஆம் ஆண்டில் இலங்கையில் புதிதாக, 28,000 பேர் புற்றுநோயாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனரென, சுகாதார அபிவிருத்தி அலுவலகம் தெரிவித்துள்ளது.

 

அத்துடன், இலங்கையில் நிகழும் மரணங்களில், புற்றுநோயால் ஏற்படும் மரணங்கள் 2 ஆம் இடத்தை பிடித்துள்ளதாக, குறித்த அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, 2018 ஆம் ஆண்டு உலகில் இனங்காணப்பட்ட புற்றுநோயாளர்களின் எண்ணிக்கை 18.1 மில்லியன் என, மதிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறான நிலையில், எதிர்வரும் 20 வருடங்களில், வருடாந்தம் இனங்காணப்படும் புற்றுநோயாளர்களின் எண்ணிக்கை 29.5 மில்லியனை விட அதிகரிக்கலாம் என, எதிர்பார்க்கப்படுவதாக குறித்த அலுவலகம் தெரிவித்துள்ளது.

Share
comments
பதாகை
பதாகை
பதாகை

வாசகர்கள்..

இந்த மாதம்...29454
மொத்த பார்வைகள்...2261895

Currently are 308 guests online


Kinniya.NET