சமுக விடயங்களை ஆவணப்படுத்துவதில் ஏ.எம்.ஏ.பரீ த் அவர்களின் வகிபங்கு
செவ்வாய்க்கிழமை, 13 டிசம்பர் 2016 15:07
அப்துல் முத்தலிப் - அப்துல் பரீத் கிண்ணியாவில் அறியத்தக்க ஊடகவியலாளர் ஆவார். 1956.12. 27 ஆம் திகதி பிறந்த இவர் ஆரம்ப காலம் தொட்டே எழுத்துத் துறையில் அதீத ஈடுபாடு கொண்டவர். கடந்த 1975, 1976, 1977 காலப் பகுதியில் ஐக்கிய தேசிய கட்சியினால் வெளியீடபட்ட ' நம் தேசம்' என்ற இலவச பத்திரிகையில் தனது முதன் முதலாக எழதிய அரசியல் செய்தி வெளியாகிய நாள் தொடக்கம் இன்று வரை தொடர்ந்தும் எழுதிக் கொண்டு வருகின்ற சிறந்த ஆளுமையாவார்.
தனது எழுத்துப் பணியில் மும்முரம் காட்டிய இவர் சமுகம் தொடர்பிலும், சமுகத்தின் பிரச்சினைகள் தொடர்பிலும் தீவிரம் காட்டினார். அப்போதைய காலகட்டத்தில் வெளிவந்த தேசிய பத்திரிகையான தினபதி, சிந்தாமணி போன்ற பத்திரிகைகளில் சமுகத்தின் பிரச்சினைகள், சமுகத்தின் நலன் தொடர்பில் அதிக செய்திகளையும், பிரச்சினைகளைப் பற்றியும் அதிகமாக எழுதி வந்தார்.
இதன் விளைவாக 01.11.1982 ஆம் ஆண்டில் தினபதி, சிந்தாமணி போன்ற பத்திரிகைகள் இவரை நிருபராகத் தேர்ந்தெடுத்தது. அதற்கு முன்னர் மூன்று மாதம் பரீட்சார்த்தமாக எழுதிய பின்னர் இவருக்கு நிரந்தர நியமனம் கிடைத்து குறிப்பிடத்தக்கதாகும்.
அப்போதைய காலத்தில் தொலைபேசியோ, இணையத்தள வசதிகள் என எதுவுமே காண்பது அரிதான ஒன்றாக இருந்தது. தபால் மூலமே செய்திகளை அனுப்ப வேண்டிய நிலையேற்பட்டது. அந்த வகையில் சமுகத்தின் முக்கிய செய்திகளை ஆவணப்படுத்தியமையின் பெரும் பங்கு இவருக்கு உள்ளது. தபால் சேவையின் துரித செவையும் இதற்கான மறு வெற்றியாகும்.
பின்னர் 1990.03.07 அன்று பாடசாலை ஆசிரியராக நியமிக்கப்பட்ட இவர், அதற்கு பின்னர் 1997.98 காலப்பகுதியில் அட்டாளைச் சேனை ஆசிரியர் பயிற்சி கலாசாலையில் பயின்றார். எழுத்து துறையில் கொஞ்சம் விடு பட்டிருந்தாலும் சின்னச்சின்ன செய்திகள் தேசிய பத்திரிகைகளில் வந்தன. அதன் பின்னர் 'தினமுரசு' பத்திரிகை 04.08.1993 அதற்குப் பின்னர் சூடாமணி பத்திரிகையில் சில காலம் நிருபராக பணியாற்றியுள்ளார்.
இதன் பின்னர் சுமார் ஏழு வருடங்களாக தமிழ் மிரர் இணையத்தளம் மற்றும் தமிழ் மிரர் பத்திரிகைக்கும் நிருபராக நியமிக்கப்பட்டுள்ளார். இவரது சேவையைப் பாராட்டி பல்வேறு கௌரவிப்புகளும் பாராட்டுக்களும் இவருக்கு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
மறைந்த முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் ,ஒலிபரப்புத்துறை பிரதியமைச்சருமான மர்ஹூம் ஏ.எல். அப்துல் மஜீத் அவர்களும் கூட இவரது சேவைகளைப் பாராட்டியமையும் குறிப்பிடத்தக்க விசேட அம்சமாகும்.மாத்திரமன்றி முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம்.ஈ.எச். மஹ்ரூப் அவர்களும் இவரது சேவையைப் பெரிதும் பாராட்டியமை குறிப்பிடத்தக்கது.
சிரேஷ்ட ஊடகவியலாளர் என்ற வகையில் 2008, கிண்ணியா பிரதேச சாகித்திய விழாவில் சத்திய எழுத்தாளன் பட்டம் வழங்கப் பட்டது. ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தால் கடந்த 2013.06.29 ஆம் திகதி கொழும்பில் பொண்ணாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டதோடு பணப் பரிசிலும் வழங்கப்பட்டது. திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர்கள் சங்கத்தின் 10 வருட நிகழ்விலும் இவர் கௌரவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
கிண்ணியா ஏ.எம்.கஸ்புள்ளா
சிறப்புக் கட்டுரை

Comments
generic viagra online
buy generic viagra online
buy sildenafil: http://barryklusman.com/#
buying viagra online
[url=http://iviagratye.com/webmaster.html ]how to buy viagra in london
viagra online apotheken
cialis tablet nedir
cheapest prices on cialis
viagra without a doctor prescription walmart
where to buy viagra in new zealand
viagra without a doctor prescription: http://iviagratye.com/#
easy to get viagra
RSS feed for comments to this post