கிழக்கில் சூரியன் மறைந்து 31 வருடங்கள்
31 வருடங்கள கடந்து (13.11.2018) இன்று அரசியலிலும் இலக்கியத்திலும் மர்ஹும் ஏ.எல்.அப்துல் மஜீத் பேசப்படும் மாமனிதராக வாழ்கின்றார்
கிழக்கிலங்கை மக்களின் வாழ்வியலுடன் பின்னிப் பிணைந்தது மட்டுமல்ல தேசிய மட்டத்தில் முஸ்லிம்களின் ஒட்டுமொத்த விடிவுக்கும் காலூன்றிய மர்ஹூம் ஏ.எல். அப்துல் மஜீத் பெரும்பான்மை மக்களின் நம்பிக்கையையும் ஆதரவையும் பெற்ற நாட்டுப்பற்றுமிக்க தேசியத் தலைவர்களில் ஒருவராகவும் திகழ்ந்த அவர் எம்மைவிட்டுப் பிரிந்து 31 ஆண்டுகள் கடந்த நிலையிலும் நாம் அப்துல் மஜீத் என்ற உத்தமமான ஒரு மனிதரை நினைவு கூறுகின்றோம்.
இந்த நாட்டில் இனங்களுக்கிடையில் நல்லெண்ணத்தையும் ஐக்கியத்தையும் வளர்ப்பதிலும் கட்டிக்காப்பதிலும் காத்திரமான பணி செய்தவர்தான் மர்ஹூம் மஜீத். இந்த தலைவனின் அரசியல் வாழ்வில் இன்;றைய தலைமுறையினருக்குக் கற்றுக் கொள்ளக்கூடிய மகத்தான பாடமும் முன்மாதிரியும் அனேகம்.
1932ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 15இல் கிண்ணியாவில் ஒரு கண்ணியமான குடும்பத்தில் முஹம்மது சுல்தான் அப்துல் லெத்திப் என்ற கிராம உத்தியோகத்தருக்கு மகனாகப் பிறந்தார் தனது ஆரம்பக் கல்வியை பெரிய கிண்ணியா அரசினர் ஆண்கள் வித்தியாலத்திலும் இடை நிலை கல்வியை திருமலை இந்துக் கல்லூரியிலும் உயர் கல்வியை மட்டக்களப்பு சிவானந்தா கல்லூரியிலும் பெற்றார் தனது மேற்படிப்புக்காக இந்தியா சென்ற அவர் திருச்சி ஜமால் கல்லூரி புனா வாதியா கல்லூரி மற்றும் சென்னை மாநில கல்லூரிகளிலும் கற்று தனது பட்டப்படிப்பையும் நிறைவு செய்தார்.இதனால் திருமலையின் முதலாவது முஸ்லிம் பட்டதாரியாகன அடையாளப்படுத்தப்பட்டார்.
தனது இளமைக் காலத்தை மக்கள் சேவை சமூகமாற்றம் போன்ற காரியங்களிலே செலவு செய்தார் சமூக சேவையில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்ட மர்ஹும் ஏ.எல்.அப்துல் மஜீத் அவர்கள் இந்தியாவில் படிப்பை முடித்த பின்னர் 1959ஆம் ஆண்டு கிண்ணியா சிரேஷ;ட பாடசாலையின் அதிபராக கடமையேற்றார் அதன் பின்னர் மாணவ கல்வி மேம்பாட்டிற்காக உழைத்தார். மாணவர்களிடம் ஒழுக்க விழுமியங்கள் பேணப்பட வேண்டுமென்பதில் கண்டிப்பாக இருந்தவர். பாடசாலையில் மாணவர்கள் வெறுமனே புத்தக படிப்பில் மூழ்கிருக்கக் கூடாது என்ற சிந்தனையில் விளையாட்டுத் துறையிலும் மாணவர்கள் ஆர்வம் காட்ட வேண்டுமென பெரிதும் உழைத்தார்.
கிண்ணியாவில் அவர் அதிபராக இருந்த காலம் அந்தக் கால மாணவர்களின் பொற்காலம் எனக் கூறினால் மிகையொன்றுமில்லை மாணவர்களுக்கு தனியான சீருடை வேண்டுமென வலியுருத்தி அதை செயலிலும் காட்டினார் திருமலை மாவட்டத்தின் ஏனைய பாடசாலைகளுக்கு முன் மாதிரியாக கிண்ணியா சிரேஷ;ட பாடசாலையாக மிளிர்வதற்கு அவர் வழிகோலினார் கல்வியே முஸ்லிம் சமூகத்தின் சொத்துயென தனது பேச்சிலும் செயலிலும் வெளிக் காட்டியவர் அவரது பரந்த சிந்தனைகளும் எண்ணங்களும் ஒரு பாடசாலைக்குள் மாத்திரம் மட்டுப்பட்டு இருப்பதை விரும்பாத காரணத்தினால் அதிபர் பதவியிலிருந்து இராஜினாமா செய்து சமூகப் பரப்பில் தனது செயற்பாடுகளை விஸ்தரித்தார். சமூக மாற்றத்தில் இளைஞர்களின் வகிபாகத்தை உணர்ந்து கொண்ட அவர் இளைஞர் சக்தியை அதற்காக பயன்படுத்த முனைந்தார் கிண்ணியாவில் எந்த விதமான நோக்கங்களுமின்றி கிடந்த இளைஞர்களை ஒரு முகப்படுத்தினார் அவர்களை ஒரு அமைப்பின் கீழ் நெறிப்படுத்த முயற்சித்தார் இதற்கமைவாக கிண்ணியா முற்போக்கு வாலிபர் என்ற அமைப்பை 1961ஆம் ஆண்டு உருவாக்கி செயற்பட்டார்.
சிறந்த பேச்சாற்றலும் சமூக வேட்கையும் கொண்ட மர்ஹும் ஏ.எல்.அப்துல் மஜீத் கிண்ணியா முற்போக்கு வாலிபர் மண்றம் மூலம் பல வகைப்பட்ட சமூகப் பணிகளை முன்னெடுத்து வந்தார் சமூக தளத்தில் கிண்ணியா முற்போக்கு வாலிபர் மன்றம் தனி இடத்தைப் பிடிக்கும் வகையில் மக்கள் மத்தியில் அதனை ஜனரஞ்கப்படித்தினார் சிரமதானப்பணிகள் முக்கிய பணியகங்களை திறந்து வைத்தல் மற்றம் புதிய பாடசாலைகளை அமைத்தல் போன்ற நலன்சார் பணிகளை இவ் மன்றத்தின் மூலம் மேற் கொண்டர். இதனால் இவ்வமைப்பின் தேவைப்பாட்டடை கிண்ணியா முதல் மட்டக்களப்பு வரையான பிரதேசங்களும் வேண்டி நின்றன இதன்படி முற்போக்கு வாலிபர் மண்றம் திருமலை மாவட்டம் மட்டுமல்லாது மட்டக்களப்பு வரைக்கும் இவ்வமைப்பு செயற்பட தொடங்கியது அவரது எதிர்கால அரசியல் செயற்பாட்டிற்து இவ்வமைப்பு முறை பெரிதும் உதவியது என்றால் அது மிகையாகாது.
1960ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் மூதூர் தொகுதியில் போடடியிட்டு வெற்றி பெற்ற அவர் 1977ஆம் அண்டு வரை பாராளுமன்ற உறுப்பினராகவும் பொது மராமத்து பதிலமைச்சராகவும், தகவல் ஒலிபரப்பு பிரதியமைச்சராகவும் தொடர்ச்சியாக 17 வருட நேரடி அரசியலில் ஈடுபட்டு அவருக்கென தனியிடத்தைப் பிடித்துக் கொண்டமைக்கு அவரது சின்தனைகளும் செயற்பாடுகளுமே பிரதான காரணமாகும் தனது அரசியல் வாழ்வில் முஸ்லிம் சமுகத்தின் ஒட்டு மொத்த நலனிலும் அக்கரை காட்டனார் துணிச்சல் மிக்க பேச்சினாலும் செயலினாலும் பல்வேறு காரியங்களை வென்றெடுத்து சமுக முன்னேற்றத்திற்கு அளப்பரிய பணிகளை செய்தார்.
சிறந்த நாவன்மை மிக்க பேச்சுமூலம் சிம்மக் குலோன் என பாராட்டுப் பெற்றவர் அவர் முஸ்லிம் சமுகத்திற்காக மட்டும் பாடுபடவில்லை ஏனைய இனங்களுடனும் நல்லுறவை பேனியவர் மூன்று இனங்களும் சமனாக வாழும் திருமலை மாவட்டத்தில் ஏனைய இனங்களை பகைத்துக் கொள்ளாமல் நட்புறவுடன் பணியாற்றியவர் தழிழ் சகோதர்களுடன் பின்னிப் பிணைந்த உறவைக் கொண்டியிருந்ததினால் அவர்களின் அபிமானத்தையும் பொற்றவர் யாருடனும் முரன்பட்டு அவர் அரசியல் நடத்தியதில்லை தான் சாந்திருந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினால் சிறுபான்மை மக்களுக்கு பிழையான முடிவுகலை எடுத்த போதெல்லாம் உடனுக்குடன் சுட்டிக்காட்டியவர் காலஞ் சென்ற ஸ்ரீமாவே பண்டாரநாயக்க, பீலிஸ் டயஸ் பண்டாரநாயக்க, கலாநிதி பதூர்தீன் மஹ்மூத் அகியோருடன் நல்லுறவைப் பேணி சமுகத்தின் பிரச்சினைகளை வென்றெடுத்தவர்.
திருமலை மாவட்டத்தில் நீர் பற்றாக் குறையால் விவசாயிகள் படும் துன்பங்களைக் கண்டு மாணவப் பராயத்திலேயே கொதித்தெழுந்தவர் கந்தளாய் குளத்தின் நீரை திசை திருப்பி மாவட்ட விவசாயிகளுக்கு நன்மை பயக்க உழைத்த பிதா மகன். மாவட்டத்தில் கிண்ணியாவில் இஸ்லாமிய கலை விழாவை நடாத்தி இஸ்லாமிய நுன்கலை திறமைகளை வெளிக் கொணர்வதற்கு அவர் செயலாற்றினார் இஸ்லாமிய நுன்கலை இலக்கியம் தொடர்பான கண்காட்சியொன்றை நடாத்தி கலை, கலாச்சார விழுமியங்களை பன்முகப் படுத்தினார் தகவல் ஒலிபரப்பு பிரதியமைச்சராக அவர் பணியாற்றிய காலத்தில் முஸ்லிம் சேவையின் ஒலிபரப்பு நேரத்தை அதிகரிக்கச் செய்தார் முஸ்லிம் சேவையை ஓர் உயிரோட்டம் உள்ள சேவையாக நேர்களின் மனதிற்கு மகிழ்வூட்டக் கூடிய சேவையாக மாற்றியமைத்த பெருமை அன்னாரையே சாறும் இன்று இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் அவடிக் கூடத்தில் அன்னாரது சமூகப்பற்றுள்ள உரைகள் அடங்கிய ஒலி நாடாக்கள் இன்னும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. ஒலிபரப்புத் துறையின் புதிய பரிமானத்தை உருவாக்க விளைந்தார். அரபுலக நாடுகளுடனும் அதன் தலைவர்களுடனும் மிக நெருங்கிய உறவை கொண்டிருந்த மர்ஹும் ஏ.எல்.அப்துல் மஜீத் அதன் மூலம் இலங்கை முஸ்லிம்கள் பயனடையும் திட்டங்களை உருவாக்கி அதில் வெற்றி கொண்டவர்.
நவம்பர் மாதம் இன்று செவ்வாய்க்கிழமை 13ஆம் திகதியுடன் அவர் மறைந்து முப்பத்தொரு (31) வருடங்களாகின்றன. ஆனால் அவர் திருகோணமலை மாவட்ட மக்களின் மனங்களிலே வாழ்ந்து கொண்டிருக்கிறார் அவர் எழுதிய நூல் ஒன்றில் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார் கிழக்கின் தலைநகரம் திருகோணமலை. திருகோணமலையின் தலைநகரம் கிண்ணியா இங்கிருந்துதான் கிழக்கிற்கு ஒரு காலத்தில் முஸ்லிம் முதலமைச்சர் வருவார் என்பதாக கூறியிருந்தார் அவரது கனவு நிறைவேறி அவரது புதல்வர் நஜிப் ஏ. மஜீத் கிழக்கின் முதலமைச்சராக பதவி வகித்தார் நீண்டகாலமாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை நேசிக்கும் இவரது குடும்பத்தினர் இன்றும் சுதந்திரக் கட்சியின் தலைமைகளால் கௌரவிக்கப்படுகின்றனர் கடந்த 13.11.1987 அன்று நிகழ்ந்த அப்துல் மஜீதின் அகால மரணம் இன்னும் இருளிலே தான் இருக்கின்றது. வரலாற்றிற்கு இம் முடிவு தெரியா விட்டாலும் வல்ல இறைவனுக்குத் தெரியும். ஏக அல்லாஹ் அன்னாருக்கு பிர்தௌஸ் என்ற பிரகாசமான சுவர்க்கத்தை வழங்குவானாக
ஜமால்தீன் எம். இஸ்மத்
கிண்ணியா
சிறப்புக் கட்டுரை

Comments
RSS feed for comments to this post