ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 21, 2019
   
Text Size

கிண்ணியாவின் முதல்வர்கள் -30; முதல் முது கல்விமாணி ஏ.எஸ்.மஹ்ரூப்

Mahroof Sir

கிண்ணியாவின் முதலாவது முதுகல்விமானி ஏ.எஸ்.மஹ்ரூப் அவர்களாவர். இவர் அப்துல் ஸமது –மர்ஹூமா உம்மு குல்தூன் ஆகியோரின் புதல்வராக 1958.06.16 இல் கிண்ணியா குட்டிக்கரச்சையில் பிறந்தார்.

அப்போது கலவன் பாடசாலையாக இருந்த குட்டிக்கரச்சை வித்தியாலயத்தில் (தற்போது இஹ்ஸானியா வித்தியாலயம்) தரம் 7 வரை கல்வி கற்ற இவர் பின்னர் கிண்ணியா மத்திய கல்லூரியில் சேர்ந்து க.பொ.த (சா.த) வரை கற்று சித்தியடைந்தார்.

தனது 20வயது வயது நிறைவில் கணித பாட ஆசிரியராக நியமனம் பெற்றார். காக்காமுனை தாருல் உழூம் மகா வித்தியாலயம், கிண்ணியா மத்திய கல்லூரி ஆகிய பாடசாலைகளில் கணித பாட ஆசிரியராகப் பணியாற்றினார்.

1982, 1983 காலப்பகுதியில் அட்டாளைச்சேனை ஆசிரியர் கலாசாலையில் பயிற்சி பெற்ற இவர் பின்னர் அல் அக்ஸா கல்லூரியில் பயிற்றப்பட்ட கணித ஆசிரியராக நியமனம் பெற்று 1992 வரை அங்கு கற்பித்தல் பணியில் ஈடுபட்டார்.

1992இல் மூதூரில் இருந்து பிரிந்து கிண்ணியா கோட்டக்கல்வி அலுவலகம் தனியாகச் செயற்படத் தொடங்கியதால் இதன் கணித பாட ஆசிரிய ஆலோசகராக நியமனம் பெற்றார். இந்த வகையில் கிண்ணியாவின் முதல் கணித பாட ஆசிரிய ஆலோசகர் இவராவார்.

2002- 2004 காலப் பகுதியில் கல்விமானி கற்கைநெறியை மேற்கொண்டு 2ஆம் வகுப்பு உயர்தரத்தில் சித்தியடைந்தார். எனவே, கிண்ணியாவின் முதல் கல்விமானி (சிறப்பு) என்ற பெருமையையும் இவர் பெறுகின்றார்.

2007-2008 காலப்பகுதியில் முதுகல்விமானி கற்கைநெறியை மேற்கொண்டு பட்டப்பின் பட்டதாரியானார். இந்த வகையில் கிண்ணியாவின் முதலாவது முதுகல்விமானி என்ற பெருமையும் இவருக்குக் கிடைத்தது. வடக்கு கிழக்கு மாகாண ஆங்கிலமொழி மூல கணிதபாட வளவாளராகப் பணியாற்றும் வாய்ப்பும் இவருக்குக் கிடைத்தது. இதன் மூலம் பல்வேறு பிரதேசங்களுக்கும் விஜயம் செய்து ஆங்கிலமொழி மூல கணிதபாட ஆசிரியர்களுக்கு வழிகாட்டியுள்ளார்.

2011 இல் கிண்ணியாவின் ஆசிரியர் வள நிலையம் ஆரம்பிக்கப்பட்டது. இதன் முதலாவது முகாமையாளராக இவர் நியமனம் பெற்று பணி புரிந்தார். இக்காலப்பகுதியில் இலங்கை அதிபர் சேவைப் போட்டிப் பரீட்சைக்கு தோற்றி அதில் சித்திபெற்று அதிபர் தரத்தையும் பெற்றுக் கொண்டார்.

2012.11.21இல் மூதூர் மத்திய கல்லூரி அதிபராகக் கடமையேற்றார். சுமார் ஒரு வருட காலம் அங்கு பணி புரிந்த இவர் அப்பாடசாலையின் அபிவிருத்திக்காக பல்வேறு பணிகள் செய்தார். 2013.09.16 இல் தனது 55வது வயதில் அரச சேவையிலிருந்து ஓய்வு பெற்றார்.

ஓய்வுக்குப் பின் தற்போது கலாநிதிப் பட்டப் படிப்பை மேற்கொண்டு வரும் இவர் சமூக சேவைகளிலும் தன்னை ஈடுபடுத்தி வருகின்றார். கிண்ணியா நிஜாமியா நிலையத்தின் முகாமைத்துவக் குழுவின் முக்கியஸ்தராக இருந்து பணியாற்றி வருகின்றார்.

தற்போது தேசிய கல்வி நிறுவகம், இலங்கை திறந்த பல்கலைக்கழகம், கொழும்புப் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் பகுதிநேர ஆசிரிய கல்வியியலாளராக இருந்து பட்டப்பின் கல்வி டிப்ளோமா பாடநெயைத் தொடரும் ஆசிரியர்களுக்கு விரிவுரையாளராக செயற்பட்டு வருகின்றார். இதனைவிட புத்தளம் மேர்சி கல்வி நிலையத்தின் நிபுணத்துவ ஆலோசகராகவும், ஆறுதல் அமைப்பின் முன்பள்ளி ஆசிரியர் போதனாசிரியராகவும் தற்போது பணியாற்றி வருகின்றார்.

கல்விக்கு வயதெல்லை தடையல்ல. அரச நியமனம் பெற்ற பின்னரும் கற்று உயரலாம் என்பதற்கு இவர் சிறந்த உதாரண புருஷராவார். ஏனெனில் க.பொ.த சாதாரண தகைமையோடு நியமனம் பெற்ற இவர் இன்று முதுகல்விமானியாக இருப்பதோடு ஓய்வுக்குப் பின்னர் கலாநிதிப் பட்டப்படிப்பையும் மேற்கொண்டு வருவதன் மூலம் இதனை நாம் கண்டுகொள்ள முடியும்.

இன்றைய இளைய தலைமுறை ஆசிரியர்களுக்கும், ஏனைய உத்தியோகத்தர்களுக்கும் இவரது கல்வி வாழ்க்கை சிறந்த முன்மாதிரியாகும். எல்லோருடனும் அன்பாகப் பழகும் இவர் நல்லதொரு கல்விச் சமூகம் உருவாகப் பெரும் பங்களிப்புச் செய்துள்ளார். இவரிடம் கற்ற மாணவர்கள் பலர் இன்று அரச, தனியார் துறைகளில் பல்வேறு உயர் பதவிகள் வகித்து வருவது இவரது அர்ப்பணிப்பான சேவையின் அடையாளச் சின்னங்களாகும்.

அச்சும்மா இவரது வாழ்க்கைத் துணைவியாவார். மப்ரூஸ் (மொரட்டுவ பல்கலைக்கழக விரிவுரையாளர்), முப்ரி (தனியார் கட்டட நிர்மான அமைப்பின் தொழில்நுட்பவியலாளர்) ஆகியோர் இவரது புதல்வர்களாவர். ஓய்வுக்குப் பின்னரும் கல்விப் பணி செய்யும் ஒரு சிலருள் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தேடல்:

ஏ.ஸீ.எம்.முஸ்இல்

ACM Mussil

Share
comments
பதாகை
பதாகை

கிண்ணியா

Prev Next

கிண்ணியாவின் முதல்வர்கள் - 31 முதல் வெளிநாட்டுச் சேவையாளர் ஏ.எல்.எம்.லாபிர்

கிண்ணியாவின் முதல்வர்கள் - 31 முதல் வெளிநாட்டுச் சேவையாளர் ஏ.எல்.எம்.லாபிர்

திறந்த போட்டிப் பரீட்சை மூலம் தெரிவான கிண்ணியாவின் முதலாவது வெளிநாட்டுச் சேவையாளர் ஜனாப். ஏ.எல். முகம்மது லாபிர் அவர்களாவர். இவர் மர்ஹூம் அப்துல் லெ...

16 மார் 2019 Hits:1266

Read more

கிண்ணியாவின் முதல்வர்கள் -30; முதல் முது கல்விமாணி ஏ.எஸ்.மஹ்ரூப்

கிண்ணியாவின் முதல்வர்கள் -30; முதல் முது கல்விமாணி ஏ.எஸ்.மஹ்ரூப்

கிண்ணியாவின் முதலாவது முதுகல்விமானி ஏ.எஸ்.மஹ்ரூப் அவர்களாவர். இவர் அப்துல் ஸமது –மர்ஹூமா உம்மு குல்தூன் ஆகியோரின் புதல்வராக 1958.06.16 இல் கிண்ணியா ...

03 மே 2017 Hits:10358

Read more

கிண்ணியாவின் முதல்வர்கள் - 29 முதல் ஆசிரியை றைஹானத்தும்மா அப்துல் ஸலாம்

கிண்ணியாவின் முதல்வர்கள் - 29 முதல் ஆசிரியை றைஹானத்தும்மா அப்துல் ஸலாம்

  கிண்ணியாவின் முதல் ஆசிரியை திருமதி றைஹானத்தும்மா அப்துல் ஸலாம் அவர்களாவர். இவர் 1950.03.05 இல் மர்ஹூம்களான செய்னா மரக்காயர் சேகப்துல்லாஹ் - கா...

25 ஒக் 2016 Hits:14312

Read more
பதாகை

வாசகர்கள்..

இந்த மாதம்...34018
மொத்த பார்வைகள்...2312577

Currently are 318 guests online


Kinniya.NET